Tuesday, 29 July 2014

ஜவுளி கடையொன்றில்..!!

நகரின் மையத்தில் பிரபலமாகியிருந்த ஜவுளி கடைவொன்றின் மிரட்டும் கூட்ட நெரிசலுக்கிடையே காற்று நிரப்பப்பட்ட தன்னுடைய பிளாஸ்டிக் பையினை மிதக்கவிட்டபடி நடந்துக்கொண்டிருந்தான் சிறுவன் ஒருவன். 

அவன் முகத்தில் சந்தோஷம் பெருகியிருந்தது. தன் பக்கம் திரும்பாததாய் இருந்தாலும் அவன் கடந்த எல்லா முகங்களுக்கும் சிறு புன்னகையை பரிசளித்திட அவன் தவறவேயில்லை. 

சங்கோஜத்துடன் ஓரமாய் ஒதுங்கி நின்றிருந்த என்னையும் ஒருமுறை பார்த்து பிரகாசமாய் சிரித்தான். நானும் சிரித்தேன். எங்களுக்குள் மிக ரகசியமாய் நட்பு பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளப்பட்டது. 

அச் சிறுவனையும், அவன் மிதக்கவிட்ட காற்று நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பையையும் அங்கு துணிப் பொருக்க வந்தவர்கள் எப்படி சிறிதும் பொருட்படுத்தவேயில்லையோ, அதுப்போலவே தன்னைச் சுற்றிலும் அசுரத்தனமாய் நிகழ்ந்தேறிக்கொண்டிருந்த வணீபத்தையும் அவன் பொருட்படுத்தவேயில்லை. 

நகரின் மையத்தில் பிரபலமாகியிருந்த அந்த ஜவுளி கடையின் மிரட்டும் கூட்ட நெரிசலுக்கிடையே காற்று நிரப்பப்பட்ட தன்னுடைய பிளாஸ்டிக் பையினை மிதக்கவிட்டபடி நடந்துக்கொண்டே இருந்தான் அந்த சிறுவன்.

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...