Skip to main content

GLOOMY SUNDAY - துயரம் ஒழுகும் இசை!!!



GLOOMY SUNDAY படத்தை சமீபத்தில் பார்த்தேன். வெறுமை நிரம்பிய மனதின் அடியாழத்தில் இசை உண்டாக்குகின்ற சிக்கல்களையும், அதிர்வுகளையும் சுற்றி பிண்ணப்பட்டிருக்கும் நெகிழ்சியான திரைப்படம்.

ஹங்கேரியின் தலைநகரான BUDAPESTல் நாஜிக்களின் சர்வாதிகாரம் ஓங்கி நின்ற காலத்தில், எளிமையானதும், புகழ்மிக்கதுமான உணவு விடுதி ஒன்றில் வெவ்வேறு மனநிலை கொண்ட மூவருக்கு இடையிலான காதலை வலிமிக்க பியானோ இசையின் வழியாக சொல்கிறது GLOOMY SUNDAY.

தனிமை சூழ்ந்த இசைக் கலைஞனான ஆண்ட்ராஸ், உணவு விடுதியின் உரிமையாளரான லாஸ்லோவின் காதலி இலோனாவின் பிறந்த நாள் பரிசாக உருவாக்குகிற இசை, வெகு சொற்ப தினங்களுக்குள்ளாகவே எண்ணற்ற தற்கொலைகளுக்கு காரணமாகிறது. அந்த இசை உருவாக்கிய ஆண்ட்ராஸே இலோனா அவனது இசைக்கு பொருத்தமான வரிகளை பாடும்பொழுது தற்கொலை செய்துக்கொள்கிறான்.

மூவருக்கு இடையிலான சொற்ப தினங்களுக்கு மட்டுமே நீடிக்கும் அழகிய வாழ்வும், ஆண்ட்ரோஸின் தற்கொலைக்கு பின் அரசியல் மாற்றங்களால் இலோனாவுக்கும், லாஸ்லோவுக்கும் நேர்கின்ற சம்பவங்களும், பேரதிர்ச்சியை மனதில் உண்டாக்குகின்றன.

ரெசோ செரஸால் உருவாக்கப்பட்ட "THE HUNGARIAN SUICIDE SONG" என்றைக்கப்படும் பியானோ இசையை மையப்படுத்தி, இத்தனை உருவாக்கமான ஒரு படத்தை இயக்கியிருக்கிறார்கள் என்று ஆச்சர்யமாக இருக்கிறது. குறிப்பாக, Erika Marozsán -னின் நடிப்பு என்றென்றும் நினைவில் நிற்கக் கூடியது. படம் நெடுக Erika Marozsán-ஐ பார்த்துக்கொண்டே இருந்தேன்.

நாம் பார்த்து நெகிழ்ந்த ஏதோவொரு படத்தை, மற்றொருவரும் பார்த்துவிட்டு அதனை நம்மிடம் பகிர்ந்துக்கொள்ளும் ஒருவகையான நடுக்கமும், பகிர்ந்துக்கொண்ட அந்த நண்பரின் மீது அதீத அன்பும் பெருகுமே அப்படியொரு படம் "GLOOMY SUNDAY". படத்தை பார்க்க சொன்ன மில்லர் சாருக்கு நன்றிகள்.

வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் பார்க்கவும்.

Popular posts from this blog

காட்ஃபாதர் பேசுகிறார்...! பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பாலோ நேர்காணல் தமிழில்: ராம் முரளி

காட்ஃபாதர் திரைப்படத்தினை இதுவரையிலும் பத்துக்கும் மேற்பட்ட முறையாவது பார்த்திருப்பேன். ஒருபோதும் அப்படம் எனக்கு துளி சலிப்பையும் ஏற்படுத்தியதில்லை. வசீகரமான மாய கனவொன்றில் நுழைந்து சிறிது நேரம் உலாத்திவிட்டு மனமொப்பாது மீண்டும் இயல்புக்கு திரும்பும் உணர்வே ஒவ்வொருமுறை காட்ஃபாதரை பார்த்து முடிக்கும்போதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. “ஒரு திரைப்படம் முடிவடைகின்றபோது, அதன் மைய கதாப்பாத்திரத்திடமிருந்து விடைபெறுதல் என்பது மிகவும் துன்பகரமானது” என்ற புகழ்பெற்ற இயக்குனர் ஒருவரின் மேற்கோள் காட்ஃபாதர் திரைப்படத்துக்கு மிக கச்சிதமாக பொருந்தும். காட்ஃபாதராக திரையில் நடமாடிய மர்லன் பிராண்டோவின் சிறுசிறு அசைவுகளும் என்னை பெரிதும் வசீகரித்திருக்கிறது. மிகப்பெரிய மாஃபியா கும்பலொன்றின் தலைவனாக அறிமுகமாகி, தன் குடும்பத்தின் மீதான அன்பினால் இறுதியில் தனது கட்டுறுதி குலைந்து சிறுபிள்ளைப்போல அழுகின்ற பிராண்டோவின் முகம் இப்போதும் நினைவில் தங்கியுள்ளது. அல் பாசினோ – ராபர்ட் டி நிரோ என்ற மிகச்சிறந்த இரு நடிகர்களை அடையாளம் காட்டிய காட்ஃபாதர் திரைப்படம் உலகின் மிக முக்கியமான பல இயக்குனர்களையும் அதிக தாக்கத்து…

மெல்வில் எனது கடவுள் - ஜான் வூ தமிழில்: ராம் முரளி

குப்ரிக்கின் திரைக்கலை! – ஸ்காட் பெக்ஸ் தமிழில்: ராம் முரளி

1999ல் ஸ்டான்லி குப்ரிக் மரணத்தை தழுவி விட்டபின்பும், இதுவரையிலும் இருபது படங்களிலாவது அவருடைய பெயர் டைட்டில் கார்டில் தொடர்ந்து விழுந்துக்கொண்டுதான் இருக்கின்றது. உலகின் எண்ணற்ற இயக்குனர்கள் தங்களின் திரைப்படங்களின் மூலமாக தொடர்ந்து அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டும், அவரைப்பற்றிய படங்களை இயக்கிக்கொண்டும் இருக்கிறார்கள். அவரது திரைபாணி ஏற்படுத்திய வீரியமிக்க தாக்கத்தால், பல இளைஞர்கள் அவரது புகழை உலகம் முழுவதும் இன்றும் பரப்பி வருகிறார்கள். அவருடைய இறுகலான குறும்புத்தனம் நம்மை ஆடம்பர உணவகங்களுக்கும், சண்டைகளற்ற போர் அறைகளுக்கும், வான் வெளிக்கும் அழைத்து சென்று பரவசமடையவும், பதைபதைத்து நடுங்கவும் செய்திருக்கின்றது.

சினிமா சார்ந்த உரையாடல்களில் தவிர்க்கவியலாத, என்றென்றும் நிலைத்திருக்கும் புகழை அடைந்திருக்கிறது அவருடைய பெயர். பாரம்பரியமிக்க வணிக சினிமாவிலிருந்து முற்றாக விலகி அதிகம் சர்ச்சைக்குரிய சவாலான களங்களை மிகுந்த மேதமையுடன் கையாண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியா புகழை அடைந்திருக்கிறார் ஸ்டான்லி குப்ரிக்.

எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள…