Skip to main content

கிறிஸ்டியன் பேல்...........!


சைக்கோ த்ரில்லர் வகையைச் சார்ந்த "தி மெஷினிஸ்ட்" என்றொரு படத்தை இன்று பார்த்தேன். டார்க் நைட்டில் பேட்மேனாக அசத்திய கிறிஸ்டியன் பேல் முற்றிலும் வேறான ஒரு பரிணாமத்தில் நடித்திருக்கும் படம். 

ஒரு சைக்கோ த்ரில்லர் படத்துக்கு தேவையான அனைத்து அம்சங்களும் சரியான கலவையில் படத்தில் சேர்ந்திருக்கிறது. குறிப்பாக, பின்னணி இசை படம் நெடுக மிரட்டிக்கொண்டே இருக்கிறது. மழைக்கால நீரோடைப்போல ஒளிப்பதிவு படத்தின் புதிரை தன்னுள் முழுமையாக புதைத்துக் கொண்டுள்ளது.

கிறிஸ்டியன் பேல் இந்த படத்துக்காக 35 கிலோ எடையைக் குறைத்துக் கொண்டாராம். பார்க்கவே படு விகாரமாக தோற்றமளிக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் வெற்றுடலுடன் கண்ணாடி முன்னால் நிற்கும் காட்சியைப் பார்த்து மிரண்டு விட்டேன். உடலில் சதை இறுகிக் கிடந்தது. கிட்டத்தட்ட நடமாடும் எலும்புக்கூடு போல அந்த காட்சியில் பேல் பயங்கரமாக இருந்தார். 

அதேபோல, தஸ்தயேவ்ஸ்கியின் இடியட் நாவலை உடலில் சாத்திக்கொண்டு மெல்ல இறந்துக் கொண்டிருப்பதைப்போல கண்களை மூடும் காட்சி மிரட்சியாக இருந்தது. பேல் இந்த படத்திற்காக இந்த அளவுக்கு தன்னை அர்பணித்திருக்கிறார் என்று நினைக்கும்போது அவர் மீதான மரியாதை பெருகுகிறது. 

மெஷினிஸ்ட்காக தன்னை முற்றாக பேல் சிதைத்துக் கொண்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். படம் முடியும் வரையிலும் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். வாய்ப்பு கிடைக்கும் நண்பர்கள் அவசியம் பார்க்கவும்.

Popular posts from this blog

காட்ஃபாதர் பேசுகிறார்...! பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பாலோ நேர்காணல் தமிழில்: ராம் முரளி

காட்ஃபாதர் திரைப்படத்தினை இதுவரையிலும் பத்துக்கும் மேற்பட்ட முறையாவது பார்த்திருப்பேன். ஒருபோதும் அப்படம் எனக்கு துளி சலிப்பையும் ஏற்படுத்தியதில்லை. வசீகரமான மாய கனவொன்றில் நுழைந்து சிறிது நேரம் உலாத்திவிட்டு மனமொப்பாது மீண்டும் இயல்புக்கு திரும்பும் உணர்வே ஒவ்வொருமுறை காட்ஃபாதரை பார்த்து முடிக்கும்போதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. “ஒரு திரைப்படம் முடிவடைகின்றபோது, அதன் மைய கதாப்பாத்திரத்திடமிருந்து விடைபெறுதல் என்பது மிகவும் துன்பகரமானது” என்ற புகழ்பெற்ற இயக்குனர் ஒருவரின் மேற்கோள் காட்ஃபாதர் திரைப்படத்துக்கு மிக கச்சிதமாக பொருந்தும். காட்ஃபாதராக திரையில் நடமாடிய மர்லன் பிராண்டோவின் சிறுசிறு அசைவுகளும் என்னை பெரிதும் வசீகரித்திருக்கிறது. மிகப்பெரிய மாஃபியா கும்பலொன்றின் தலைவனாக அறிமுகமாகி, தன் குடும்பத்தின் மீதான அன்பினால் இறுதியில் தனது கட்டுறுதி குலைந்து சிறுபிள்ளைப்போல அழுகின்ற பிராண்டோவின் முகம் இப்போதும் நினைவில் தங்கியுள்ளது. அல் பாசினோ – ராபர்ட் டி நிரோ என்ற மிகச்சிறந்த இரு நடிகர்களை அடையாளம் காட்டிய காட்ஃபாதர் திரைப்படம் உலகின் மிக முக்கியமான பல இயக்குனர்களையும் அதிக தாக்கத்து…

மெல்வில் எனது கடவுள் - ஜான் வூ தமிழில்: ராம் முரளி

குப்ரிக்கின் திரைக்கலை! – ஸ்காட் பெக்ஸ் தமிழில்: ராம் முரளி

1999ல் ஸ்டான்லி குப்ரிக் மரணத்தை தழுவி விட்டபின்பும், இதுவரையிலும் இருபது படங்களிலாவது அவருடைய பெயர் டைட்டில் கார்டில் தொடர்ந்து விழுந்துக்கொண்டுதான் இருக்கின்றது. உலகின் எண்ணற்ற இயக்குனர்கள் தங்களின் திரைப்படங்களின் மூலமாக தொடர்ந்து அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டும், அவரைப்பற்றிய படங்களை இயக்கிக்கொண்டும் இருக்கிறார்கள். அவரது திரைபாணி ஏற்படுத்திய வீரியமிக்க தாக்கத்தால், பல இளைஞர்கள் அவரது புகழை உலகம் முழுவதும் இன்றும் பரப்பி வருகிறார்கள். அவருடைய இறுகலான குறும்புத்தனம் நம்மை ஆடம்பர உணவகங்களுக்கும், சண்டைகளற்ற போர் அறைகளுக்கும், வான் வெளிக்கும் அழைத்து சென்று பரவசமடையவும், பதைபதைத்து நடுங்கவும் செய்திருக்கின்றது.

சினிமா சார்ந்த உரையாடல்களில் தவிர்க்கவியலாத, என்றென்றும் நிலைத்திருக்கும் புகழை அடைந்திருக்கிறது அவருடைய பெயர். பாரம்பரியமிக்க வணிக சினிமாவிலிருந்து முற்றாக விலகி அதிகம் சர்ச்சைக்குரிய சவாலான களங்களை மிகுந்த மேதமையுடன் கையாண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியா புகழை அடைந்திருக்கிறார் ஸ்டான்லி குப்ரிக்.

எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள…