Skip to main content

Inglorious Bastards


Quentin Tarantinoவின் " Inglorious blastards " திரைப்படத்தை இன்று பார்த்தேன். முன்பே ஒருமுறை பாரத்தத் திரைப்படம்தான் என்றாலும், சமீபத்தில் வெளியாகியிருந்த அவரது " Django Unchained " பார்த்ததிலிருந்து மீண்டும் Inglorious blastards பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. சுவாரஸ்யமான நீண்ட உரையாடல்கள், மூளை தெறிப்பு காட்சிகள், திரைக்கதையில் திடீரென்று அவர் கையாளும் எதிர்பாராத அதிரி புதிரி டிவிஸ்ட்டுகள் என்று தனது பாணியிலான முந்தைய படங்களுக்கு சற்றும் குறைவில்லாத, இன்னும்கூட அதிக அளவிலான வன்முறை காட்சிகள் நிறைந்தத் திரைப்படம். 

ஹிட்லரின் யூத இன அழிப்பு நடவடிக்கைகளையும், அதற்கு எதிரான யூத - அமெரிக்க கூட்டு புரட்சிகர குழு ஒன்றின் பழிவாங்கல்களுமே Inglorious blastards. யூத - அமெரிக்க கூட்டு புரட்சிகர குழுவின் தலைவராக பிராட் பிட் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். படம் நெடுகிலும் குறும்புத்தனமான பார்வையின் மூலமாகவே எளிதாக மனதை வென்றுவிடுகிறார். அவருக்காகவே இன்னும் ஒருமுறைக்கூட இந்த திரைப்படத்தை பார்க்கலாம். இரண்டாம் உலக யுத்த காலக்கட்டத்தில் நிகழ்வதாக திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும், இது முழுக்க முழுக்க வரலாற்றிலிருந்து விலகி நிற்கிறது. குறிப்பாக, ஹிட்லர், கோயபெல்ஸ் ஆகியோரின் முடிவு முழுக்க முழுக்க புனையப்பட்டுள்ளது. 

நாஜிப் படையை சேர்ந்த அதிகாரிகளை கடத்தி வந்து அவர்களது மண்டையை கத்தியால் வெட்டி எறியும்க் காட்சி உக்கிரத்தின் உச்சம். அதேபோல மதுபானக்கடை ஒன்றில் மிக நீளமாக நீண்டுக்கொண்டே இருக்கும் காட்சியில் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென்று ஒருவர் மாற்றி ஒருவர் சுட்டுக்கொண்டு சாகிறார்கள். அந்த காட்சி Quentin Tarantinoவின் Reservoir dogs கிளைமாக்சை நினைவுப்படுத்தியது. கிரைம் வகை சார்ந்த படங்களை விரும்புகிறவர்களுக்கு நிச்சயம் Inglorious blastards பிடிக்கும். திரைக்கதையில் எப்போதும் வித்தியாசத்தை கடைப்பிடிக்கும் Quentin Tarantino இந்த படத்தின் திரைக்கதையை ஐந்து பாகங்களாக பிரித்து சேப்டர் ஒன், சேப்டர் டு என்று நாவலை போல விரிக்கிறார். 

ஒளிப்பதிவும், இசையும் திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளது. குறிப்பாக படத்தின் ஆரம்ப காட்சியிலும், இரவு நேரம் ஒன்றில் படம்பிடிக்கப்பட்டிருக்கும்திரையரங்கை மிக அழகாக பதிவு செய்துள்ளார்கள். Quentin Tarantinoவின் எந்தவொரு படத்தை பார்ப்பவர்களும் அவருடைய மற்ற படங்களை நிச்சயமாக தேடிப் பார்ப்பார்கள் என்றே கருதுகிறேன். இன்னும் இந்த படத்தை பற்றி நிறைய எழுத வேண்டும் போலத் தோன்றினாலும், அது மிக Quentin Tarantinoவின் பட வசங்களை போலவே மிக நீளமாக நீண்டுவிடக்கூடும் என்பதால் இத்தோடு முடித்துக்கொள்கிறேன். கிரைம் வகைப் படங்களை விரும்புகிறவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.

Popular posts from this blog

காட்ஃபாதர் பேசுகிறார்...! பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பாலோ நேர்காணல் தமிழில்: ராம் முரளி

காட்ஃபாதர் திரைப்படத்தினை இதுவரையிலும் பத்துக்கும் மேற்பட்ட முறையாவது பார்த்திருப்பேன். ஒருபோதும் அப்படம் எனக்கு துளி சலிப்பையும் ஏற்படுத்தியதில்லை. வசீகரமான மாய கனவொன்றில் நுழைந்து சிறிது நேரம் உலாத்திவிட்டு மனமொப்பாது மீண்டும் இயல்புக்கு திரும்பும் உணர்வே ஒவ்வொருமுறை காட்ஃபாதரை பார்த்து முடிக்கும்போதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. “ஒரு திரைப்படம் முடிவடைகின்றபோது, அதன் மைய கதாப்பாத்திரத்திடமிருந்து விடைபெறுதல் என்பது மிகவும் துன்பகரமானது” என்ற புகழ்பெற்ற இயக்குனர் ஒருவரின் மேற்கோள் காட்ஃபாதர் திரைப்படத்துக்கு மிக கச்சிதமாக பொருந்தும். காட்ஃபாதராக திரையில் நடமாடிய மர்லன் பிராண்டோவின் சிறுசிறு அசைவுகளும் என்னை பெரிதும் வசீகரித்திருக்கிறது. மிகப்பெரிய மாஃபியா கும்பலொன்றின் தலைவனாக அறிமுகமாகி, தன் குடும்பத்தின் மீதான அன்பினால் இறுதியில் தனது கட்டுறுதி குலைந்து சிறுபிள்ளைப்போல அழுகின்ற பிராண்டோவின் முகம் இப்போதும் நினைவில் தங்கியுள்ளது. அல் பாசினோ – ராபர்ட் டி நிரோ என்ற மிகச்சிறந்த இரு நடிகர்களை அடையாளம் காட்டிய காட்ஃபாதர் திரைப்படம் உலகின் மிக முக்கியமான பல இயக்குனர்களையும் அதிக தாக்கத்து…

மெல்வில் எனது கடவுள் - ஜான் வூ தமிழில்: ராம் முரளி

குப்ரிக்கின் திரைக்கலை! – ஸ்காட் பெக்ஸ் தமிழில்: ராம் முரளி

1999ல் ஸ்டான்லி குப்ரிக் மரணத்தை தழுவி விட்டபின்பும், இதுவரையிலும் இருபது படங்களிலாவது அவருடைய பெயர் டைட்டில் கார்டில் தொடர்ந்து விழுந்துக்கொண்டுதான் இருக்கின்றது. உலகின் எண்ணற்ற இயக்குனர்கள் தங்களின் திரைப்படங்களின் மூலமாக தொடர்ந்து அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டும், அவரைப்பற்றிய படங்களை இயக்கிக்கொண்டும் இருக்கிறார்கள். அவரது திரைபாணி ஏற்படுத்திய வீரியமிக்க தாக்கத்தால், பல இளைஞர்கள் அவரது புகழை உலகம் முழுவதும் இன்றும் பரப்பி வருகிறார்கள். அவருடைய இறுகலான குறும்புத்தனம் நம்மை ஆடம்பர உணவகங்களுக்கும், சண்டைகளற்ற போர் அறைகளுக்கும், வான் வெளிக்கும் அழைத்து சென்று பரவசமடையவும், பதைபதைத்து நடுங்கவும் செய்திருக்கின்றது.

சினிமா சார்ந்த உரையாடல்களில் தவிர்க்கவியலாத, என்றென்றும் நிலைத்திருக்கும் புகழை அடைந்திருக்கிறது அவருடைய பெயர். பாரம்பரியமிக்க வணிக சினிமாவிலிருந்து முற்றாக விலகி அதிகம் சர்ச்சைக்குரிய சவாலான களங்களை மிகுந்த மேதமையுடன் கையாண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியா புகழை அடைந்திருக்கிறார் ஸ்டான்லி குப்ரிக்.

எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள…