Skip to main content

சைனா கெய்ரெற்சியின் "குழந்தைப் போராளி"


"அவர்கள் என்னிடமிருந்து அம்மாவைப் பறித்துக் கொண்டு எனது கைகளில் துப்பாக்கியைத் தந்தார்கள்..." என்ற உலுக்கும் வரிகளுடன் துவங்கும் சைனா கெய்ரெற்சியின் "குழந்தைப் போராளி" எனும் தன் வரலாற்று நூலை வாசித்து முடித்தேன். இடி அமீனுக்கு பிறகான உகாண்டாவில் நிலவிய அரசுக்கும் - புரட்சியாளர்களுக்கும் இடையிலான போராட்டத்தில் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டு, பல்வேறு சித்திரவதைகளால் துண்டாடப்பட்ட தனது வலி மிகுந்த வாழ்க்கையை சைனா விவரித்திருக்கிறார்.

மோசமான தந்தை ஒருவனுக்கு பிறந்தவிட்ட பாவத்தால், தனது ஒன்பதாவது வயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறும் சைனா, எதிர்பாராவிதமாக போராளி குழு ஒன்றுடன் இணைந்துவிடுகிறாள். அரசுக்கு எதிரான அப்போராளி குழுவின் பழிவாங்கல் நடவடிக்கைகள் அனைத்திலும் சைனாவும், அவளைப் போன்ற சிறுமிகளுமே முன்னிறுத்தப்படுகிறார்கள். இதனால் மரணம் தொடர்ந்து சைனாவை மிரட்டியப்படியே இருக்கிறது. அதேபோல தனக்கு மேலுள்ள பல்வேறு அதிகாரிகளாலும் சைனா ஈவிரக்கமின்றி வேட்டையாடப் படுகிறாள். மிகச்சிறிய வயதிலேயே அவளது உடலும் மனமும் உருத்தெரியாமல் சிதைந்துவிடுகிறது. பலவருட போராட்டத்திற்கு பிறகு உகாண்டாவின் கலவரச் சூழலிலிருந்து தப்பும் சைனா, நிம்மதியைத் தேடி கென்யா, தென் ஆப்பாரிக்கா என்று இடமாறிக்கொண்டே இருக்கிறாள். எனினும் அவளை ஒடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நிகழ்ந்துக்கொண்டே இருக்கின்றன. 

ஒரு வழியாக, டென்மார்க்கிற்கு அகதியாக செல்லும் சைனா, தற்போது தன்போன்று வழி தவறிய குழந்தைப் போராளிகளுக்கான மறுவாழ்வு மையமொன்றை அங்கேயே நடத்தி வருகிறாள். களவாடப்பட்ட குழந்தை பருவம், குழந்தைப் போராளி, ஓடு சைனா ஓடு எனும் மூன்று பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ள இந்நூலில் சைனாவின் அழுகைகளும், ஓலங்களும் தொடர்ந்து நம்மை துரத்தியபடியே இருக்கின்றது. கைவிடப்பட்ட ஒரு சிறுமியின் வாழ்தலுக்கான கெஞ்சல் நிச்சயம் நம்மை கலங்கடித்துவிடும். அவசியம் வாசிக்கக்கூடாத நூல் என்றுதான் இதனை சொல்லத் தோன்றுகிறது. அந்தளவுக்கு வன்முறையும், மனிதநேயமற்றதன்மையும் வரிக்கு வரிக்கு நீண்டு மனதில் குருதி வழியச் செய்கிறது.

Popular posts from this blog

காட்ஃபாதர் பேசுகிறார்...! பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பாலோ நேர்காணல் தமிழில்: ராம் முரளி

காட்ஃபாதர் திரைப்படத்தினை இதுவரையிலும் பத்துக்கும் மேற்பட்ட முறையாவது பார்த்திருப்பேன். ஒருபோதும் அப்படம் எனக்கு துளி சலிப்பையும் ஏற்படுத்தியதில்லை. வசீகரமான மாய கனவொன்றில் நுழைந்து சிறிது நேரம் உலாத்திவிட்டு மனமொப்பாது மீண்டும் இயல்புக்கு திரும்பும் உணர்வே ஒவ்வொருமுறை காட்ஃபாதரை பார்த்து முடிக்கும்போதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. “ஒரு திரைப்படம் முடிவடைகின்றபோது, அதன் மைய கதாப்பாத்திரத்திடமிருந்து விடைபெறுதல் என்பது மிகவும் துன்பகரமானது” என்ற புகழ்பெற்ற இயக்குனர் ஒருவரின் மேற்கோள் காட்ஃபாதர் திரைப்படத்துக்கு மிக கச்சிதமாக பொருந்தும். காட்ஃபாதராக திரையில் நடமாடிய மர்லன் பிராண்டோவின் சிறுசிறு அசைவுகளும் என்னை பெரிதும் வசீகரித்திருக்கிறது. மிகப்பெரிய மாஃபியா கும்பலொன்றின் தலைவனாக அறிமுகமாகி, தன் குடும்பத்தின் மீதான அன்பினால் இறுதியில் தனது கட்டுறுதி குலைந்து சிறுபிள்ளைப்போல அழுகின்ற பிராண்டோவின் முகம் இப்போதும் நினைவில் தங்கியுள்ளது. அல் பாசினோ – ராபர்ட் டி நிரோ என்ற மிகச்சிறந்த இரு நடிகர்களை அடையாளம் காட்டிய காட்ஃபாதர் திரைப்படம் உலகின் மிக முக்கியமான பல இயக்குனர்களையும் அதிக தாக்கத்து…

மெல்வில் எனது கடவுள் - ஜான் வூ தமிழில்: ராம் முரளி

குப்ரிக்கின் திரைக்கலை! – ஸ்காட் பெக்ஸ் தமிழில்: ராம் முரளி

1999ல் ஸ்டான்லி குப்ரிக் மரணத்தை தழுவி விட்டபின்பும், இதுவரையிலும் இருபது படங்களிலாவது அவருடைய பெயர் டைட்டில் கார்டில் தொடர்ந்து விழுந்துக்கொண்டுதான் இருக்கின்றது. உலகின் எண்ணற்ற இயக்குனர்கள் தங்களின் திரைப்படங்களின் மூலமாக தொடர்ந்து அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டும், அவரைப்பற்றிய படங்களை இயக்கிக்கொண்டும் இருக்கிறார்கள். அவரது திரைபாணி ஏற்படுத்திய வீரியமிக்க தாக்கத்தால், பல இளைஞர்கள் அவரது புகழை உலகம் முழுவதும் இன்றும் பரப்பி வருகிறார்கள். அவருடைய இறுகலான குறும்புத்தனம் நம்மை ஆடம்பர உணவகங்களுக்கும், சண்டைகளற்ற போர் அறைகளுக்கும், வான் வெளிக்கும் அழைத்து சென்று பரவசமடையவும், பதைபதைத்து நடுங்கவும் செய்திருக்கின்றது.

சினிமா சார்ந்த உரையாடல்களில் தவிர்க்கவியலாத, என்றென்றும் நிலைத்திருக்கும் புகழை அடைந்திருக்கிறது அவருடைய பெயர். பாரம்பரியமிக்க வணிக சினிமாவிலிருந்து முற்றாக விலகி அதிகம் சர்ச்சைக்குரிய சவாலான களங்களை மிகுந்த மேதமையுடன் கையாண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியா புகழை அடைந்திருக்கிறார் ஸ்டான்லி குப்ரிக்.

எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள…