Skip to main content

ஆல்பர் காம்யு எனும் அந்நியன்ஆல்ஃபர் காம்யுவின் வாழ்க்கை வரலாற்று நூலை கடந்த மூன்று தினங்களாக வாசித்து முடித்தேன். அந்நியன் நாவலின் நாயகனைப்போலவே எளிதில் அணுகமுடியாத, புதிர்தன்மைக் கொண்ட மனிதராகவே காம்யுவும் வாழ்ந்திருக்கிறார். அல்ஜீரியாவில் திராட்சைத் தோட்டம் ஒன்றில் பணியாற்றும் காம்யுவின் அப்பாவை அறிமுகப்படுத்தியபடியே நூல் துவங்குகிறது. தொடர்ந்து அவர் அங்கு பணியாற்ற முடியாமல் அவரது மனைவியை காய்ச்சல் தாக்குகிறது. இதனால் முதல் உலக போரில் ஜெர்மனிக்கு எதிராக சிப்பாயாக நுழைந்து, விரைவிலேயே குண்டடிப்பட்டு இறந்துவிடுகிறார். 

அப்போது காம்யு ஒரு வயதைக்கூட தொட்டிராத எட்டு மாதக் குழந்தை. இதனால் அவரது பால்ய வயதுகளில் பாட்டி வீட்டிலேயே காம்யு வளருகிறார். அங்கு ஃபுட்பாலும், மாமாவுடனான சீட்டாட்டங்களும் அவரது பொழுதுகளை நிரப்புகின்றன. பின் அரசாங்கத்திடம் உதவித்தொகைப் பெற்று ஆரம்பப் பள்ளியில் சேருகிறார். பின்பு உயர்நிலைப்பள்ளியில். அங்குதான் அவருக்கு வறுமைக் குறித்த புரிதல்களும், தன் சக மாணவர்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளும் அதிர்ச்சியை உண்டாக்குகின்றன. " ஆரம்பப் பள்ளியில் இருக்கும்போது எல்லோரும் என் போலவே என்று நினைத்தேன். வறுமை எல்லோருக்குமானது என்று தோன்றியது. ஆனால் உயர் நிலைப் பள்ளியில்தான் வாழ்வில் வித்தியாசங்கள் இருப்பதைத் தெரிந்துக்கொண்டேன் " என்று அதனை காம்யுவே விளக்குகிறார். 

தொடர்ந்து வாழ்க்கை அவருக்கு பல படிப்பினைகளை வழங்கியபடியே இருக்கிறது. வெளியுலகம் பற்றியும், இலக்கியங்களைப் பற்றியும் தன் ஆசிரியர் ஜீன் கிரீனரிடமிருந்து அறிந்துகொள்ளும் காம்யு, அவரைத் தன் மானசீக குருவாகவே கருதுகிறார். பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழிருந்த அல்ஜீரியாவில் அரேபியர்களின் புறக்கணிக்கப்பட்ட நிலைக் குறித்து வருந்துகிறார். காம்யுவின் பிற்கால வாழ்க்கை அதிகம் மிகுந்த குழப்பாமாகவே இந் நூலில் அனுகப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் காம்யு மற்றவர்களுக்கு எழுதிய கடிதங்களின் வாயிலாகவே அக் காலக்கட்டத்தை நூலாசிரியர் எழுதியிருக்கிறார். முதலில் கம்யுனிஸ்ட்டாகவும், பின் அதிலிருந்து விலகி அதிகார வர்க்கத்தால் நசுக்கப்படும் சாதாரண மனிதர்களை முன்னிறுத்தி பலக் கட்டுரைகளை எழுதிகிறார். அரசியலற்ற ஒரு சமூக முறையை உருவாக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார். 

சிறுவயதுமுதலே அவரை விடாதுத் துரத்தும் காச நோய், பிற்காலத்தில் அவரை தொடர்ந்து இயங்க விடாமல் தொந்தரவுப் படுத்துகிறது. அக் காலகட்டங்களில் மரணம் குறித்தே அதிகப்படியாக சிந்தித்துக் கொண்டிருந்திருக்கிறார். வாழவேண்டும் என்கிற நம்பிக்கையும், மரணம் குறித்த அச்சமும் அவரை எல்லோரிடமிருந்தும் அந்நியப்படுத்துகிறது. அவரது சிறந்த படைப்புகளான அந்நியன், தி பிளேக் முதலியவை இக் காலக்கட்டங்களிலேயே எழுதப்பட்டிருக்கின்றன. A Happy man, Modesty, A free man, A man like any other முதலியன அந்நியனுக்கு அவர் முதலில் சூட்டிய பல்வேறு பெயர்கள். நிர்பந்தத்தால் இயங்குகிற மனிதர்களை குறித்து பெரிதும் கவலைப்பட்டிருக்கிறார், யாருமே வாழ்வதில்லை என்பது அவரதுக் கூற்று. 

கொடுந் துயரம் துரத்தியபோதும் சினிமா நட்சத்திரங்கள் குறித்து கிசுகிசு எழுதுவதையோ , அரசியல் வாதிகளுக்கு ஜால்ரா தட்டுவதையோ மிகவும் இழிவான நிலை என்று கருதி அதனை முற்றாக புறக்கணித்தார். எப்போதும் மனிதத்துவம் பற்றிய சகோதர நேசிப்பை வலியுத்தும் விதமாகவும் எழுதியும், வாழ்ந்து காண்பித்த காம்யு " குழந்தையின் மரணத்தை விடவும் அதிர்ச்சியானது வேறெதுவும் இல்லை, கார் விபத்தில் இறப்பதை விடவும் அபத்தமானது எதுவுமில்லை " என்று தன் நண்பர்களிடம் சொல்லியிருந்ததுபோலவே எதிர்பாராத ஒரு நாளில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

" நான் பெரிய கதாநாயகனாகவோ, பற்றற்றவனாகவோ இருக்க விரும்பவில்லை.... ஒரு மனிதனாக இருக்கவே விரும்புகிறேன் " இதுவேதான் அவரது வாழ்க்கையும்.

வஸந்த் செந்தில் என்பவரின் கடுமையான உழைப்பில் உருவாகியிருக்கும் இந் நூலின் விலை ரூ.125, புதுமைப்பித்தன் பதிப்பகம். தலைப்பு ஆல்பெர் காம்யுவேதான்.

Popular posts from this blog

காட்ஃபாதர் பேசுகிறார்...! பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பாலோ நேர்காணல் தமிழில்: ராம் முரளி

காட்ஃபாதர் திரைப்படத்தினை இதுவரையிலும் பத்துக்கும் மேற்பட்ட முறையாவது பார்த்திருப்பேன். ஒருபோதும் அப்படம் எனக்கு துளி சலிப்பையும் ஏற்படுத்தியதில்லை. வசீகரமான மாய கனவொன்றில் நுழைந்து சிறிது நேரம் உலாத்திவிட்டு மனமொப்பாது மீண்டும் இயல்புக்கு திரும்பும் உணர்வே ஒவ்வொருமுறை காட்ஃபாதரை பார்த்து முடிக்கும்போதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. “ஒரு திரைப்படம் முடிவடைகின்றபோது, அதன் மைய கதாப்பாத்திரத்திடமிருந்து விடைபெறுதல் என்பது மிகவும் துன்பகரமானது” என்ற புகழ்பெற்ற இயக்குனர் ஒருவரின் மேற்கோள் காட்ஃபாதர் திரைப்படத்துக்கு மிக கச்சிதமாக பொருந்தும். காட்ஃபாதராக திரையில் நடமாடிய மர்லன் பிராண்டோவின் சிறுசிறு அசைவுகளும் என்னை பெரிதும் வசீகரித்திருக்கிறது. மிகப்பெரிய மாஃபியா கும்பலொன்றின் தலைவனாக அறிமுகமாகி, தன் குடும்பத்தின் மீதான அன்பினால் இறுதியில் தனது கட்டுறுதி குலைந்து சிறுபிள்ளைப்போல அழுகின்ற பிராண்டோவின் முகம் இப்போதும் நினைவில் தங்கியுள்ளது. அல் பாசினோ – ராபர்ட் டி நிரோ என்ற மிகச்சிறந்த இரு நடிகர்களை அடையாளம் காட்டிய காட்ஃபாதர் திரைப்படம் உலகின் மிக முக்கியமான பல இயக்குனர்களையும் அதிக தாக்கத்து…

மெல்வில் எனது கடவுள் - ஜான் வூ தமிழில்: ராம் முரளி

குப்ரிக்கின் திரைக்கலை! – ஸ்காட் பெக்ஸ் தமிழில்: ராம் முரளி

1999ல் ஸ்டான்லி குப்ரிக் மரணத்தை தழுவி விட்டபின்பும், இதுவரையிலும் இருபது படங்களிலாவது அவருடைய பெயர் டைட்டில் கார்டில் தொடர்ந்து விழுந்துக்கொண்டுதான் இருக்கின்றது. உலகின் எண்ணற்ற இயக்குனர்கள் தங்களின் திரைப்படங்களின் மூலமாக தொடர்ந்து அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டும், அவரைப்பற்றிய படங்களை இயக்கிக்கொண்டும் இருக்கிறார்கள். அவரது திரைபாணி ஏற்படுத்திய வீரியமிக்க தாக்கத்தால், பல இளைஞர்கள் அவரது புகழை உலகம் முழுவதும் இன்றும் பரப்பி வருகிறார்கள். அவருடைய இறுகலான குறும்புத்தனம் நம்மை ஆடம்பர உணவகங்களுக்கும், சண்டைகளற்ற போர் அறைகளுக்கும், வான் வெளிக்கும் அழைத்து சென்று பரவசமடையவும், பதைபதைத்து நடுங்கவும் செய்திருக்கின்றது.

சினிமா சார்ந்த உரையாடல்களில் தவிர்க்கவியலாத, என்றென்றும் நிலைத்திருக்கும் புகழை அடைந்திருக்கிறது அவருடைய பெயர். பாரம்பரியமிக்க வணிக சினிமாவிலிருந்து முற்றாக விலகி அதிகம் சர்ச்சைக்குரிய சவாலான களங்களை மிகுந்த மேதமையுடன் கையாண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியா புகழை அடைந்திருக்கிறார் ஸ்டான்லி குப்ரிக்.

எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள…