Skip to main content

சொல்வதெல்லாம் பொய்கள் - ஒரு உள்ளக் குமுறல்

அப்பாவி மனிதர்களின் கண்ணீரை காசாக்கும் வேலையை எப்போதுதான் இந்த டிவி சேனல்கள் நிறுத்தித் தொலையப் போகிறதோ தெரியவில்லை. விஜய் டிவி துவங்கி வைத்தது, இப்போது தந்தி டிவி வரையில் வந்துவிட்டது. யாரோ ஒரு இளைஞன் தன் இறந்துப்போன மானைவிக் குறித்த நினைவுகளை அடுக்கிவிட்டு அழுதுப் புலம்புகிறார். தன் குடும்பமே தனக்கு பெரும் துரோகம் இழைத்துவிட்டதாக துடிக்கிறார். அவருக்கு எதிரில் அமர்ந்திருக்கும் குஷ்பு "கவலைப்படாதீங்க, உங்களுக்காகதான் நான் போராடிக்கிட்டு இருக்கேன், நிச்சயம் நீதி வாங்கிக் கொடுதுடுறேன்" என்கிறார். நம்மால்தான் இந்த கூத்தையெல்லாம் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்றே புரியவில்லை. 

இதெல்லாம் நாடகம் போல திட்டமிட்டு அரங்கேற்றப் படுகிறதா? அல்லது உண்மையில் இவர்களையெல்லாம் எங்கெங்கிருந்தோ நான் கடவுளில் வருவதைப்போல வலுக்கட்டாயமாக இழுந்துவந்து சித்திரவதை செய்து அழ வைக்கிறார்களா? என்று தெரியவில்லை. நிச்சயமாக நீதிக்கேட்டு தொலைக்காட்சியின் வாயிலில் யாரும் தொங்கிக்கொண்டிருக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன். சொல்வதெல்லாம் பொய் நிகழ்ச்சியில் வருகிறவர்கள்தான் ஸ்டுடியோக்குள் நுழையும்போதே அழுதுக்கொண்டே வருவார்கள். அப்படி அழவில்லை என்றாலும், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் அந்த அம்மா கன்னாபின்னாவென்று திட்டியாவது அழ வைத்துவிடும். நிகழ்ச்சியில் பங்கேற்கும் இரு தரப்புகளில் யாரேனும் ஒருவர் அழுதுவிட்டாலும்போதும் நிகழ்ச்சி பெரும் வெற்றியடைந்துவிட்டது என்று பொருள். 

அது பங்கேற்கிறவர்களின் நாடகமோ அல்லது, நீதி வாங்கித் தருவதாக சொல்லி தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் நாடகமோ எதுவானும் இத்தகைய நிகழ்ச்சிகள் பார்வையாளனின் மனதில் ஏற்படுத்தும் இம்பாக்ட் மிகவும் கொடுமையானைது. பெரும்பாலும் வீட்டுப் பெண்கள்தான் இதுபோன்ற நிகழ்ச்சிகளால் பெரிதும் பாதிப்படைகிறார்கள். பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி மீளத் துயரில் ஆட்கொண்டவர்களாக சித்திரக்கப்படும் இத்தகைய நிகழ்ச்சிகளின் பங்கேற்பாளர்களை வைத்து, வீட்டு பெண்களை மன நோயாளிகளாக்கப் போவதை தவிர வேறெதுவும் இவர்கள் சாதிக்கப்போவதில்லை. வேண்டுமாலும் டி.ஆர்.பி யை கூட்டிக் கொள்ளலாம். உணர்ச்சி சுரண்டலின் மூலம் பார்வையாளனை எளிதாக முட்டாளாக்கிவிடும் இந்த பாவத்தையெல்லாம் எங்க போய் கழுவப் போறாங்க என்று தெரியவில்லை.

Popular posts from this blog

காட்ஃபாதர் பேசுகிறார்...! பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பாலோ நேர்காணல் தமிழில்: ராம் முரளி

காட்ஃபாதர் திரைப்படத்தினை இதுவரையிலும் பத்துக்கும் மேற்பட்ட முறையாவது பார்த்திருப்பேன். ஒருபோதும் அப்படம் எனக்கு துளி சலிப்பையும் ஏற்படுத்தியதில்லை. வசீகரமான மாய கனவொன்றில் நுழைந்து சிறிது நேரம் உலாத்திவிட்டு மனமொப்பாது மீண்டும் இயல்புக்கு திரும்பும் உணர்வே ஒவ்வொருமுறை காட்ஃபாதரை பார்த்து முடிக்கும்போதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. “ஒரு திரைப்படம் முடிவடைகின்றபோது, அதன் மைய கதாப்பாத்திரத்திடமிருந்து விடைபெறுதல் என்பது மிகவும் துன்பகரமானது” என்ற புகழ்பெற்ற இயக்குனர் ஒருவரின் மேற்கோள் காட்ஃபாதர் திரைப்படத்துக்கு மிக கச்சிதமாக பொருந்தும். காட்ஃபாதராக திரையில் நடமாடிய மர்லன் பிராண்டோவின் சிறுசிறு அசைவுகளும் என்னை பெரிதும் வசீகரித்திருக்கிறது. மிகப்பெரிய மாஃபியா கும்பலொன்றின் தலைவனாக அறிமுகமாகி, தன் குடும்பத்தின் மீதான அன்பினால் இறுதியில் தனது கட்டுறுதி குலைந்து சிறுபிள்ளைப்போல அழுகின்ற பிராண்டோவின் முகம் இப்போதும் நினைவில் தங்கியுள்ளது. அல் பாசினோ – ராபர்ட் டி நிரோ என்ற மிகச்சிறந்த இரு நடிகர்களை அடையாளம் காட்டிய காட்ஃபாதர் திரைப்படம் உலகின் மிக முக்கியமான பல இயக்குனர்களையும் அதிக தாக்கத்து…

மெல்வில் எனது கடவுள் - ஜான் வூ தமிழில்: ராம் முரளி

குப்ரிக்கின் திரைக்கலை! – ஸ்காட் பெக்ஸ் தமிழில்: ராம் முரளி

1999ல் ஸ்டான்லி குப்ரிக் மரணத்தை தழுவி விட்டபின்பும், இதுவரையிலும் இருபது படங்களிலாவது அவருடைய பெயர் டைட்டில் கார்டில் தொடர்ந்து விழுந்துக்கொண்டுதான் இருக்கின்றது. உலகின் எண்ணற்ற இயக்குனர்கள் தங்களின் திரைப்படங்களின் மூலமாக தொடர்ந்து அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டும், அவரைப்பற்றிய படங்களை இயக்கிக்கொண்டும் இருக்கிறார்கள். அவரது திரைபாணி ஏற்படுத்திய வீரியமிக்க தாக்கத்தால், பல இளைஞர்கள் அவரது புகழை உலகம் முழுவதும் இன்றும் பரப்பி வருகிறார்கள். அவருடைய இறுகலான குறும்புத்தனம் நம்மை ஆடம்பர உணவகங்களுக்கும், சண்டைகளற்ற போர் அறைகளுக்கும், வான் வெளிக்கும் அழைத்து சென்று பரவசமடையவும், பதைபதைத்து நடுங்கவும் செய்திருக்கின்றது.

சினிமா சார்ந்த உரையாடல்களில் தவிர்க்கவியலாத, என்றென்றும் நிலைத்திருக்கும் புகழை அடைந்திருக்கிறது அவருடைய பெயர். பாரம்பரியமிக்க வணிக சினிமாவிலிருந்து முற்றாக விலகி அதிகம் சர்ச்சைக்குரிய சவாலான களங்களை மிகுந்த மேதமையுடன் கையாண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியா புகழை அடைந்திருக்கிறார் ஸ்டான்லி குப்ரிக்.

எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள…