Skip to main content

மேஜை மேஜைதான்!எனக்கு மிகவும் பிடித்த கதைகளுள் ஜெர்மனிய எழுத்தாளர் பீட்டர் பிஷெல்லின் மேஜை மேஜைதான் என்ற சிறுகதையும் ஒன்று. உண்மையில் இது மிகவும் வினோதமான ஒரு கதை. இந்த கதையை தமிழில் மொழிப்பெயர்த்துள்ள சுகுமாரன் கூட தனது முன்னுரையில் இது விநோதமாக பட்டதால் மொழிப்பெயர்த்தேன் என்று எழுதுயுள்ளார். தன் சொந்தபந்தங்களை இழந்து தனிமையில் வாழும் ஒரு முதியவரை பற்றிய கதை இது. அந்த முதியவர் ஒரு சிறிய அறையில் வசித்து வருகிறார். தினமும் உறங்குவதும் , எழுந்து சற்று உலா போவதும் , பின் மீண்டும் வந்து கட்டிலில் வீழ்வதுமாக தனது நாட்களை நகர்த்தும் முதியவருக்கு அந்த வாழ்க்கை சலித்துவிடுகிறது. நின்ற பேசக்கூட நிமிட நேரம் செலவலிக்காத மனிதர்களை நினைத்து அவரும் மிகவும் வருந்துகிறார். இப்படிப்பட்ட ஒரு சூழலில் ஒரு நாள் திடீரென்று வானம் நாள் முழுவதும் இருட்டிக்கொண்டு நிற்கிறது. மக்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக நின்று அந்த சூழலை ரசிக்கின்றனர். இந்த நிகழ்வால் முதியவரும் மகிழ்கிறார். அவரை யாரும் கண்ணெடுத்தும் பார்க்கவில்லையென்றாலும் தான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரையும் பார்த்து நேசத்துடன் சிரிக்கிறார். பின் தன் அறையை நெருங்கி அதன் கதவை திறந்து பார்ப்பவருக்கு அதிர்ச்சி. அந்த அறையில் எதுவும் மாறவில்லை. மேஜை மேஜையாகவே இருக்கிறது. கடிகாரம் கடிகாரமாகவே இருக்கிறது, கட்டில் கட்டிலாகவே இருக்கிறது. மீண்டும் முதியவர் சோர்ந்து போகிறார். ஏன் தனக்கு மட்டும் எதுவும் மாறவில்லை என்று வருந்துகிறார். பிறகு ஏன் கட்டில் கடிகாரமாக இருக்கக்கூடாது, மேஜை ஏன் கட்டிலாக இருக்கக்கூடாது என்று எண்ணி அப்படியே அவைகளுக்கு பெயர் சூட்டி விடுகிறார். அன்று முதல் அவருக்கு மேஜை கட்டில் , கட்டில் கடிகாரம். இது அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அது ஒரு புது மொழியாகவும் மாறிவிடுகின்றது. அவருக்கு மட்டுமே புரியும் மொழி. அதன் பிறகு அவர் சாலையில் நடந்துக்கொண்டிருக்கும்போதுயாரேனும் சாலையை சாலை என்றால் அவருக்கு சிரிப்பு வந்ததது. அவர்களை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை ,அவர்களாலும் அவரை புரிந்துகொள்ள முடியவில்லை.

உண்மையில் இது வேடிக்கை கதை அல்ல. ஒரு மனிதன் தனது வாழ்நாளை முழுமையாக அனுபவித்துவிட்டு, வயதாகி தளர்ந்துவிட்ட பிறகு அவனது மனம் மீண்டும் ஒரு குழந்தையாவே மாறிவிடுகின்றது. அவர் மகிழ்ச்சிக்காக ஏங்குகிறார். மிச்சமிருக்கும் தனது ஒவ்வொரு கணத்தையும் அவர் சந்தோஷமாக வாழவே விரும்புகிறார். மனித கூட்டத்தில் தான் எதிர்பார்க்கும் மகிழ்வை தேடி அலைகிறார். பெரும்பாலும் அது அவனுக்கு கிடைப்பதில்லை. இந்த கதையில் வரும் முதியவர் தனக்கான அந்த மகிழ்வை தானே உருவாக்கிக்கொள்கிறார். அவர் மகிழ்ச்சியாகவே வாழ்கிறார். இந்த கதையை முதல் முறையாக வாசித்த போது அப்படியொன்றும் எனக்கு சிறப்பாக தோன்றவில்லை. ஆனாலும் மீண்டும் மீண்டும் வாசித்தபோதுதான் , இது மிக சிறந்த கதைகளுள் ஒன்று என எனக்குப்பட்டது......... எனக்கு மிகவும் பிடித்த கதை!

Popular posts from this blog

காட்ஃபாதர் பேசுகிறார்...! பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பாலோ நேர்காணல் தமிழில்: ராம் முரளி

காட்ஃபாதர் திரைப்படத்தினை இதுவரையிலும் பத்துக்கும் மேற்பட்ட முறையாவது பார்த்திருப்பேன். ஒருபோதும் அப்படம் எனக்கு துளி சலிப்பையும் ஏற்படுத்தியதில்லை. வசீகரமான மாய கனவொன்றில் நுழைந்து சிறிது நேரம் உலாத்திவிட்டு மனமொப்பாது மீண்டும் இயல்புக்கு திரும்பும் உணர்வே ஒவ்வொருமுறை காட்ஃபாதரை பார்த்து முடிக்கும்போதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. “ஒரு திரைப்படம் முடிவடைகின்றபோது, அதன் மைய கதாப்பாத்திரத்திடமிருந்து விடைபெறுதல் என்பது மிகவும் துன்பகரமானது” என்ற புகழ்பெற்ற இயக்குனர் ஒருவரின் மேற்கோள் காட்ஃபாதர் திரைப்படத்துக்கு மிக கச்சிதமாக பொருந்தும். காட்ஃபாதராக திரையில் நடமாடிய மர்லன் பிராண்டோவின் சிறுசிறு அசைவுகளும் என்னை பெரிதும் வசீகரித்திருக்கிறது. மிகப்பெரிய மாஃபியா கும்பலொன்றின் தலைவனாக அறிமுகமாகி, தன் குடும்பத்தின் மீதான அன்பினால் இறுதியில் தனது கட்டுறுதி குலைந்து சிறுபிள்ளைப்போல அழுகின்ற பிராண்டோவின் முகம் இப்போதும் நினைவில் தங்கியுள்ளது. அல் பாசினோ – ராபர்ட் டி நிரோ என்ற மிகச்சிறந்த இரு நடிகர்களை அடையாளம் காட்டிய காட்ஃபாதர் திரைப்படம் உலகின் மிக முக்கியமான பல இயக்குனர்களையும் அதிக தாக்கத்து…

மெல்வில் எனது கடவுள் - ஜான் வூ தமிழில்: ராம் முரளி

குப்ரிக்கின் திரைக்கலை! – ஸ்காட் பெக்ஸ் தமிழில்: ராம் முரளி

1999ல் ஸ்டான்லி குப்ரிக் மரணத்தை தழுவி விட்டபின்பும், இதுவரையிலும் இருபது படங்களிலாவது அவருடைய பெயர் டைட்டில் கார்டில் தொடர்ந்து விழுந்துக்கொண்டுதான் இருக்கின்றது. உலகின் எண்ணற்ற இயக்குனர்கள் தங்களின் திரைப்படங்களின் மூலமாக தொடர்ந்து அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டும், அவரைப்பற்றிய படங்களை இயக்கிக்கொண்டும் இருக்கிறார்கள். அவரது திரைபாணி ஏற்படுத்திய வீரியமிக்க தாக்கத்தால், பல இளைஞர்கள் அவரது புகழை உலகம் முழுவதும் இன்றும் பரப்பி வருகிறார்கள். அவருடைய இறுகலான குறும்புத்தனம் நம்மை ஆடம்பர உணவகங்களுக்கும், சண்டைகளற்ற போர் அறைகளுக்கும், வான் வெளிக்கும் அழைத்து சென்று பரவசமடையவும், பதைபதைத்து நடுங்கவும் செய்திருக்கின்றது.

சினிமா சார்ந்த உரையாடல்களில் தவிர்க்கவியலாத, என்றென்றும் நிலைத்திருக்கும் புகழை அடைந்திருக்கிறது அவருடைய பெயர். பாரம்பரியமிக்க வணிக சினிமாவிலிருந்து முற்றாக விலகி அதிகம் சர்ச்சைக்குரிய சவாலான களங்களை மிகுந்த மேதமையுடன் கையாண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியா புகழை அடைந்திருக்கிறார் ஸ்டான்லி குப்ரிக்.

எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள…