Skip to main content

அன்னா தஸ்தயேவ்ஸ்கியின் "நினைவு குறிப்புகள்"தன் வாழ்நாளின் பெரும்பகுதியை தனிமையில் கழித்த தஸ்தயேவ்ஸ்கி, அவரை அழுத்திக்கொண்டிருந்த கடன் சுமையிலிருந்து மீள பதிப்பாளர் ஒருவரின் கடுமையான நிபந்தனைகளோடு சூதாடி நாவலை எழுதத் துவங்குகிறார். அந் நாவலை விரைவாக எழுதி முடிக்க அவருக்கு ஒரு சுருக்கெழுத்தாளரின் துணை தேவைப்படுகிறது. அப்போதுதான் அன்னா அவருக்கு அறிமுகமாகிறார். தஸ்தயேவ்ஸ்கி சொல்ல சொல்ல அன்னா அதனை சுருக்கி எழுதிக்கொண்டு, வீடு திரும்பியதும் அதனை முழுமைப்படுத்துகிறாள். இவ்வாறாக இருவரும் இணைந்து சூதாடியை குறிப்பிட்ட தேதிக்குள் எழுதி முடிக்கிறார்கள். தஸ்தயேவ்ஸ்கி பெரும் கடன் சுமையிலிருந்து மீள்கிறார். நாவலை எழுதிய காலத்தில் இருவருக்குமிடையே எழுத்தாளர், காரியதரிசி என்பதையும் தாண்டி மெல்லியதாக காதல் அரும்புகிறது. அந்த காதல் நாவல் எழுதும் பணி நிறைவடைந்த பிற்பாடு, தஸ்தயேவ்ஸ்கியை உறங்கவிடாமல் துரத்துகிறது. தான் புதிதாக இன்னொரு நாவல் எழுதவிருப்பதாகவும், அதற்கும் அன்னாதான் சுருக்கெழுத்தாளராகவும் பணியாற்ற வேண்டும் என்றும் அன்னாவிடம் தஸ்தயேவ்ஸ்கி சொல்கிறார். பின் தனது புதிய நாவலின் கதையை விவரிப்பதைபோல அன்னாவுடனான தனது காதலை வெளிப்படுத்துகிறார். அன்னாவும் தஸ்தயேவ்ஸ்கியின் காதலை ஏற்கிறார். இருவரும் மனமொத்த தம்பதிகளாக தங்களது இறுதிகாலம் முழுவதும் வாழ்ந்து முடிக்கிறார்கள்.

அன்னா தஸ்தயேவ்ஸ்கி எழுதிய நினைவு குறிப்புகள் எனும் புத்தகத்தை இன்று வாசித்தேன். சுருக்கெழுத்தாளராக தஸ்தயேவ்ஸ்கிவிடம் பணிக்கு சேர்ந்ததிலிருந்து, அவரை காதலித்து கரம் கோர்த்தது வரை தனது நினைவிலிருந்து மீட்டு எழுதியுள்ளார். தனிமையின் ஊழியில் சிக்கி வெறுமையில் வாழ்ந்துக்கொண்டிருந்த தஸ்தயேவ்ஸ்கி, அன்னாவின் வருகைக்கு பிறகு எப்படி முகமலர்ச்சி பெற்றார் என்பதையும், தஸ்தயேவ்ஸ்கியின் மனம் எப்படி அன்புக்காக ஏங்கி தவித்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ள உதவும் மிகவும் அருமையான புத்தகம். ருஷ்ய இலக்கியத்தின் பிதாமகனும், உலக இலக்கிய ஆர்வலர்களால் கொண்டாடப்பட்டவருமான தஸ்தயேவ்ஸ்கி தனது சிறுவயதிலேயே தாய் தந்தையரை இழந்தவர். சர்வாதிகாரியான ஜார் மன்னருக்கு எதிராக கலகங்களில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர். மரண தண்டனை நிறைவேற்ற இருந்த நொடி பொழுதில் அது சிறை தண்டனையாக குறைக்கப்பட்டு, ருஷ்யாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர். அவரது சிறை அனுபவங்களை " மரண வீட்டின் குறிப்புகள் " எனும் நாவலின் வாயிலாக நாம் அறிந்துக்கொள்ள முடியும். சிறு வயது இழப்புகளும், வலிப்பு நோயும், சிறை அனுபவங்களும், அதன் பிறகான வாழ்க்கையில் அவர் அனுபவித்த காதல் தோல்விகள், தனிமை, துயரம் யாவும் அவரை சூதாட்டத்தின் கோர பிடியில் சிக்க வைத்தன. அந்த காலக்கட்டத்தில்தான் அன்னாவை தஸ்தயேவ்ஸ்கி சந்திக்கிறார். இலக்கிய பணி காதலாக உருவெடுக்கிறது. ஆயினும் 
தஸ்தயேவ்ஸ்கி தனது இறுதி காலம்வரை சூதாடியாகவே வாழ்ந்தார். அன்பும், புறக்கணிப்பும், துயரமும், இருளும் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அன்னா தனது இறுதி காலத்தில் தன் காதல் கணவரை பற்றி எழுதி உள்ள இந் நினைவு குறிப்புகளில் சிறந்த இலக்கிய படைப்பாகவும், ஒரு இளம் பெண்ணின் மன ஓட்டத்தை படம் பிடித்துக்காட்டுவதாகவும் அமைந்துள்ளது. {தஸ்தயேவ்ஸ்கியை அன்னா சந்தித்தபோது தஸ்தயேவ்ஸ்கிக்கு 40+ வயது, அன்னாவுக்கு 22 வயது} யூமா வாசுகி வாசிக்க உகந்த வகையில் செம்மையாக மொழிபெயர்த்துள்ளார்.

பாரதி புத்தகாலயம், விலை ரூ.45/-

Popular posts from this blog

காட்ஃபாதர் பேசுகிறார்...! பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பாலோ நேர்காணல் தமிழில்: ராம் முரளி

காட்ஃபாதர் திரைப்படத்தினை இதுவரையிலும் பத்துக்கும் மேற்பட்ட முறையாவது பார்த்திருப்பேன். ஒருபோதும் அப்படம் எனக்கு துளி சலிப்பையும் ஏற்படுத்தியதில்லை. வசீகரமான மாய கனவொன்றில் நுழைந்து சிறிது நேரம் உலாத்திவிட்டு மனமொப்பாது மீண்டும் இயல்புக்கு திரும்பும் உணர்வே ஒவ்வொருமுறை காட்ஃபாதரை பார்த்து முடிக்கும்போதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. “ஒரு திரைப்படம் முடிவடைகின்றபோது, அதன் மைய கதாப்பாத்திரத்திடமிருந்து விடைபெறுதல் என்பது மிகவும் துன்பகரமானது” என்ற புகழ்பெற்ற இயக்குனர் ஒருவரின் மேற்கோள் காட்ஃபாதர் திரைப்படத்துக்கு மிக கச்சிதமாக பொருந்தும். காட்ஃபாதராக திரையில் நடமாடிய மர்லன் பிராண்டோவின் சிறுசிறு அசைவுகளும் என்னை பெரிதும் வசீகரித்திருக்கிறது. மிகப்பெரிய மாஃபியா கும்பலொன்றின் தலைவனாக அறிமுகமாகி, தன் குடும்பத்தின் மீதான அன்பினால் இறுதியில் தனது கட்டுறுதி குலைந்து சிறுபிள்ளைப்போல அழுகின்ற பிராண்டோவின் முகம் இப்போதும் நினைவில் தங்கியுள்ளது. அல் பாசினோ – ராபர்ட் டி நிரோ என்ற மிகச்சிறந்த இரு நடிகர்களை அடையாளம் காட்டிய காட்ஃபாதர் திரைப்படம் உலகின் மிக முக்கியமான பல இயக்குனர்களையும் அதிக தாக்கத்து…

மெல்வில் எனது கடவுள் - ஜான் வூ தமிழில்: ராம் முரளி

குப்ரிக்கின் திரைக்கலை! – ஸ்காட் பெக்ஸ் தமிழில்: ராம் முரளி

1999ல் ஸ்டான்லி குப்ரிக் மரணத்தை தழுவி விட்டபின்பும், இதுவரையிலும் இருபது படங்களிலாவது அவருடைய பெயர் டைட்டில் கார்டில் தொடர்ந்து விழுந்துக்கொண்டுதான் இருக்கின்றது. உலகின் எண்ணற்ற இயக்குனர்கள் தங்களின் திரைப்படங்களின் மூலமாக தொடர்ந்து அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டும், அவரைப்பற்றிய படங்களை இயக்கிக்கொண்டும் இருக்கிறார்கள். அவரது திரைபாணி ஏற்படுத்திய வீரியமிக்க தாக்கத்தால், பல இளைஞர்கள் அவரது புகழை உலகம் முழுவதும் இன்றும் பரப்பி வருகிறார்கள். அவருடைய இறுகலான குறும்புத்தனம் நம்மை ஆடம்பர உணவகங்களுக்கும், சண்டைகளற்ற போர் அறைகளுக்கும், வான் வெளிக்கும் அழைத்து சென்று பரவசமடையவும், பதைபதைத்து நடுங்கவும் செய்திருக்கின்றது.

சினிமா சார்ந்த உரையாடல்களில் தவிர்க்கவியலாத, என்றென்றும் நிலைத்திருக்கும் புகழை அடைந்திருக்கிறது அவருடைய பெயர். பாரம்பரியமிக்க வணிக சினிமாவிலிருந்து முற்றாக விலகி அதிகம் சர்ச்சைக்குரிய சவாலான களங்களை மிகுந்த மேதமையுடன் கையாண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியா புகழை அடைந்திருக்கிறார் ஸ்டான்லி குப்ரிக்.

எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள…