Thursday, 18 April 2013

சர்வாதிகாரத்துக்கு எதிராக.....!பிரட்டனில் 1600 களில் நடைபெற்ற கலகங்களையும், புரட்சியார்களின் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகளையும் பின்னணியாகக் கொண்டு விரியும் திரைப்படம் " V for Vendetta ". அதே போன்ற ஒரு கிளர்ச்சியும், எழுச்சியும் மீண்டும் பிரிட்டன் மண்ணில் தோன்றி அந்த தேசத்து மக்களை சர்வாதிகார பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதை இப்படம் வலியுறுத்துகிறது. கதை நிகழும் காலமோ 2030. அப்போது உலகத்தில் எல்லா நாடுகளும் ஏதேனும் ஒரு யுத்தத்தில் மூழ்கி திளைத்துக்கொண்டிருக்கிறன. அனைத்து நாடுகளிலும் குழப்பமும், அமைதியின்மையும் சூழ்ந்திருக்க, பிரிட்டிஷ் மக்கள் மட்டும் சர்வாதிகார ஆட்சியின் கீழ் அடிபணிந்து பயத்துடனே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு பரவிய ஒருவிதமான வைரஸ் நோய். கிட்டத்தட்ட 80,000 மக்களை பலிகொண்ட கோர சம்பவம் அது. அந்த பாதிப்புகளிலிருந்து முழுமையாக மீண்டு வர முடியாத பிரிட்டிஷ் மக்கள், தங்களை அடிமைகளாக வாழ பழக்கப்படுத்திக் கொள்கின்றனர். இந்த சந்தர்பத்தில்தான் முகமூடி அணிந்த மர்ம மனிதன் ஒருவன் அவர்கள் முன் தோன்றுகிறான். அவன் அவர்களை போராட தூண்டுகிறான். பயம்தான் அனைத்திற்கும் காரணம், அதனை கலைந்து எறியுங்கள், அப்போது விடுதலை தழைக்கும் என்று வீர முழக்கமிடுகிறான். குறிவைத்து சில அரசாங்க அதிகாரிகளை கொலை செய்கிறான். அவனுக்கு துணையாக எவி எனும் பெண்ணும் இணைந்துக்கொள்கிறாள். அந்த வருடத்தின் நவம்பர் 5ஆம் தேதி பாராளுமன்ற கட்டிடத்தை தகர்க்க முகமூடி மனிதன் திட்டமிடுகிறான். யார் அந்த முகமூடி மனிதன் என்பதும், பாராளுமன்ற கட்டிடத்தை அவன் தகர்த்தானா இல்லையா என்பதும் படத்தின் உச்சகட்டம். ஆக்சன் வகையை சேர்ந்த கமர்ஷியல் திரைப்படம்தான் என்றாலும் இப்படம் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.ஆலன் மூர் என்பவர் எழுதிய கிராபிக்ஸ் நாவலை அடிப்படையாகக் கொண்டு ஜேம்ஸ் மெக்தெய்கு என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். உள்நாட்டு தேர்தலில் வென்று ஆட்சி தொட்டிலில் அமர இப்படியெல்லாம் மனித உயிர்களோடு விளையாடுவார்களா என்று மனம் பதைபதைக்கும்படியாக பல திடீர் திருப்பங்கள் திரைக்கதையில் சுழலுகின்றன. ஒரு சிறு காட்சியையோ, வசனத்தையோ தவற விட்டுவிட்டால் மொத்தம் படத்தின் கதையும் புரியாமல் குழப்பமாகிவிடும்படியாக அடுத்தடுத்த காட்சிகள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து திரைக்கதைக்கு வலு சேர்க்கின்றது. படத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான காட்சி, மருத்துவராக பணியாற்றும் பெண் ஒருவரை முகமூடி மனிதன் கொலை செய்யும் காட்சிதான். அந்த காட்சியில் மருத்துவ பெண் உறங்கும் அறை சுவரில் முகமூடி மனிதன் சாய்ந்து நிற்கிறான். அப்போது அவனை கண்டுவிட்ட அவள் " நீ என்ன கொல்ல போறியா " என்று பயத்துடன் வினவுகிறாள். அதற்கு அவன், " இல்ல, பத்து நிமிஷம் முன்னாடியே உன்ன கொல்ல ஆரம்பிச்சிட்டேன் " என்று உயிரை பறிக்கும் விஷ ஊசியை உயர்த்தி காண்பிக்கிறான். உடனே அவள் " என்ன பண்ணிச்சிரு " என்கிறாள். " எப்போ நீ மன்னிப்பு கேட்டுடியோ அப்பவே, உன்ன மன்னிச்சாச்சு " அடுத்த நொடியில் அவள் உயிரிழக்கிறாள். அதேபோல எவியை அடையாளம் தெரியாத மனிதன் ஒருவன் கடத்தி சிறையில் வைத்திருக்கும்போது, அந்த அறையில் இருக்கும் ஒரு எலி பொந்தில் அவளுக்கு ஒரு கடிதம் கிடைக்கிறது. அந்த கடிதம் முன்பு அதே அறையில் லெஸ்பியன் எனும் காரணத்திற்காக அடைக்கப்பட்ட பெண் ஒருத்தி அவளுடைய ரத்தத்தால் எழுதியது. அந்த கடிதத்திலிருந்து எவி வலிகளையும், வேதனைகளையும் உணர்கிறாள். வாழ்வின் அவல சுவை அவளை கவ்வி இழுத்துக்கொள்கிறது. இனி உலகில் எதுவும் இல்லை என்று அவள் உணரும்போது மீண்டும் அந்த முகமூடி மனிதன் அவள் முன்னால் தோன்றுகிறான். அவளை இத்தனை நாட்கள் அடைத்து வைத்திருந்தது தான்தான் என்றும், வாழ்வை அவளுக்கு புகட்டவே தான் இப்படி செய்ததாகவும் விளக்குகிறான். பயம் எனும் மாய சிருஷ்டியை கல்லால் அடித்து விரட்டும் அற்புதமான காட்சியிது. 

விடுதலை விரும்பிகளுக்கும், சாகச பிரியர்களுக்கும் இப்படம் கூட்டாக பந்தி விரிக்கிறது. ஒரு போராட்ட வகையை சேர்ந்த படம் என்பதை தாண்டி V for Vendetta வில் காதலும், துரோகமும், குரூரமும், சோகமும் கொட்டி கிடக்கிறது. கடந்த 2005 ல் வெளியான இப்படம் வெளியிடப்பட்ட எல்லா நாடுகளிலும் வசூலை வாரிக் குவித்தது. எவியாக நடித்திருப்பவர் நடாலி போர்ட்மேன். இவர் பிளாக் ஸ்வான் எனும் திரில்லர் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஆஸ்கார் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை அள்ளி குவித்தவர். வாய்ப்பு கிடைக்கும் நண்பர்கள் அவசியம் பார்க்கவும். 

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...