Skip to main content

வலியை உணர்த்த கூட மொழி அவசியம்!!!


தமிழகத்திலேயே முதல் முறையாக சிறை கைதிகளுக்கு இலவசமாக ஹிந்தி வகுப்பு எடுத்து அவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்பட உருதுணையாக இருந்து வருகிறார் கோவை சாய்பாபா காலனியில் வசித்து வரும் சரவணன்.  “ Innova Te Zone “ என்ற பெயரில் கோவையின் சில பகுதிகளில் ஹிந்தி பயிற்ச்சி நிலையங்களை நடத்தி வரும் சரவணன் கடந்த 2 ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் சிறைபட்டிருக்கும் கைதிகளுக்கு இலவசமாக ஹிந்தி பயிற்ச்சி வகுப்புகள் நடத்தி வருகிறார்.


        
 " நான் சத்தியமங்களத்தில் ஒரு சாதாரண கைத்தறி நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவன்அதனால் நெசவு செய்த துணிமணிகளை எடுத்து கொண்டு வியாபாரத்திற்காக அடிகடி வட மாநிலங்களுக்கு செல்ல வேண்டி இருந்தது. வியாபார வசதிக்காக முதலில் ஹிந்தியை படிக்க துவங்கிய நான் பிறகு பிரேம் சந் , கபீர் தாஸ் , துளசி தாஸ் போன்ற எழுத்தாளர்களால் ஈர்க்கப்பட்டு அம்மொழியை முறைபடி பயின்று அதில் தேர்ச்சியும் பெற்றேன். ஆனால் அந் நாட்களில் எனக்கு ஹிந்தி வகுப்பு எடுக்கும் எண்ணம் எதுவும் இல்லை.
         
   இந் நிலையில் வணிகத்திற்காக நண்பர் ஒருவரோடு சூரத் சென்றிருந்த போது ஒரு தனியார் விடுதியில் தங்க வேண்டிய வந்தது. அன்று இரவு 12 மணியை கடந்த பிறகு நண்பர் கடுமையான வயிற்று வலியால் துடித்துக்கொண்டிருந்தார். உதவி செய்ய யாருமே இல்லாமல் ஆதரவற்று விடுதியின் மேலாளரை அணுகிய போது சற்றென்று அவர் ஒரு காரை எடுத்து கொண்டு மருத்துவர் ஒருவரின் வீட்டிற்கு எங்களை அழைத்து சென்றார். அங்கு டாக்டர் நண்பரிடம் வலியை பற்றி ஹிந்தியில் விசாரிக்க , நண்பர் என்னிடம் தமிழில் விவரிக்க நான் மீண்டும் மருத்துவரிடம் ஹிந்தியில் மொழிபெயர்த்து சொல்ல வேண்டியிருந்தது. மொழி தெரியாத காரணத்தால் வலியை கூட விவரிக்க முடியாத நண்பரின் இயலாமையும் , அந்த நள்ளிரவு நேரத்தில் எங்களுக்காக சற்றென்று உதவ முன்வந்த விடுதி மேலாளரின் மனித நேயமும் என்னை சிந்திக்க வைத்தது. அப்போது தான் முதல் முறையாக தமிழகத்தில் ஹிந்தி வகுப்பெடுத்து பல ஹிந்தி பண்டிதர்களை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
      


    இதையடுத்து ஆண்டுதோறும் தர்ஷண பாரதி ஹிந்தி பிரசார சபா நடத்தும் ப்ராத்மிக் மத்தியமா தேர்வை எழுதும் மாணவர்களுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் சத்தியமங்களத்தில் பயிற்ச்சி வகுப்புகளை துவங்கினேன். ஆனால் இந்த பயிற்ச்சி வகுப்புகள் கோவையில் இருந்தால் இன்னும் பல மாணவர்களிடம் கொண்டு செல்ல முடியும் என்பதால் 2006 முதல் கோவையில் நடத்தி வருகிறேன். இந்த பயிற்ச்சி வகுப்புகளின் சிறப்பு 30 மணி நேரத்தில் ஹிந்தியை முழுமையாக கற்று கொடுப்பது தான். அதற்காக நான் செய்தி தாள்களில் கொடுத்திருந்த விள்ம்பரங்களை பார்த்துவிட்டு கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதியில்  கோவை மத்திய சிரையில் ஆயுள் கைதியாக இருக்கும் சதாசிவம் என்பவர் எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்.


        
   அந்த கடிதத்தில் தனக்கு 68 வயது நிறைவடைந்து விட்டது என்றும் என்னிடம் ஹிந்தி பயில ஆர்வமாக இருப்பதாக்வும் மேலும் இந்த பயிற்ச்சி தனக்கு விடுதலை கிடைத்த பின் தன்னுள் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் எழுதியிருந்தார். அப்போது தான் எனக்கு இவர் ஒருவரோடு மட்டும் நிறுத்தி கொள்ளாமல் ஆர்வமுள்ள அனைத்து கைதிகளும் ஹிந்தி மொழியை இலவசமாக கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. இதன் மூலம் சிறைக்குள்ளேயே முடங்கி கிடக்கும் கைதிகளுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கவும் வாய்ப்பாக இருக்கும் என கருதி அந்த கடிதத்தையும் , என் செயல் திட்டங்களையும் காவல் ஆணையரிடம் விவரித்தேன்.
         
   அவர்களும் இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து 2010 ஏப்ரல் முதல் இந்த பயிற்ச்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆண் கைதிகளுக்கு நானும் , பெண் கைதிகளுக்கு என் துணைவியார் திருமதி. துளசி சரவணன் அவர்களும் பயிற்ச்சி அளித்து வருகிறோம் . வாரவாரம் ஞாயிறு கிழமைகளில் மத்திய சிறைக்குள்ளாகவே 4 மணி நேர பயிற்ச்சி வகுப்புகள் எடுத்து வருகிறோம். சில தினங்களுக்கு முன்பு 10 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலை பெற்ற நாகர்கோவிலை சேர்ந்த ஒருவர் என்னிடம் இந்த ஹிந்தி மொழியை கற்றதன் மூலம் தன் வாழ்க்கையில் ஒரு புது நம்பிக்கை கிடைத்துள்ளதாகவும் , இனிமேல் எங்கு சென்றாவது பிழைத்து கொள்வேன் என்றும் கண்ணீர் மல்க என் கைகளை பிடித்து கொண்டு அழுத போது நான் நெகிழ்ந்துவிட்டேன். இன்னும் இந்த பயிற்ச்சிகளை பெரிய அளவில் கொண்ட செல்ல வேண்டும் என்று இப்போது எனக்கு ஆசையாக உள்ளது. கண்டிப்பாக என்னால் முடிந்த அனைத்து சாத்தியங்களையும் முயன்று பார்ப்பேன் " உணர்வூர்வமாக முடித்து கொண்டார் சரவணன்.

இவரை தொடர்புகொள்ள: சரவணன் – 9994491636

( இது விகடனில் வெளியான எனது கட்டுரை )

Popular posts from this blog

காட்ஃபாதர் பேசுகிறார்...! பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பாலோ நேர்காணல் தமிழில்: ராம் முரளி

காட்ஃபாதர் திரைப்படத்தினை இதுவரையிலும் பத்துக்கும் மேற்பட்ட முறையாவது பார்த்திருப்பேன். ஒருபோதும் அப்படம் எனக்கு துளி சலிப்பையும் ஏற்படுத்தியதில்லை. வசீகரமான மாய கனவொன்றில் நுழைந்து சிறிது நேரம் உலாத்திவிட்டு மனமொப்பாது மீண்டும் இயல்புக்கு திரும்பும் உணர்வே ஒவ்வொருமுறை காட்ஃபாதரை பார்த்து முடிக்கும்போதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. “ஒரு திரைப்படம் முடிவடைகின்றபோது, அதன் மைய கதாப்பாத்திரத்திடமிருந்து விடைபெறுதல் என்பது மிகவும் துன்பகரமானது” என்ற புகழ்பெற்ற இயக்குனர் ஒருவரின் மேற்கோள் காட்ஃபாதர் திரைப்படத்துக்கு மிக கச்சிதமாக பொருந்தும். காட்ஃபாதராக திரையில் நடமாடிய மர்லன் பிராண்டோவின் சிறுசிறு அசைவுகளும் என்னை பெரிதும் வசீகரித்திருக்கிறது. மிகப்பெரிய மாஃபியா கும்பலொன்றின் தலைவனாக அறிமுகமாகி, தன் குடும்பத்தின் மீதான அன்பினால் இறுதியில் தனது கட்டுறுதி குலைந்து சிறுபிள்ளைப்போல அழுகின்ற பிராண்டோவின் முகம் இப்போதும் நினைவில் தங்கியுள்ளது. அல் பாசினோ – ராபர்ட் டி நிரோ என்ற மிகச்சிறந்த இரு நடிகர்களை அடையாளம் காட்டிய காட்ஃபாதர் திரைப்படம் உலகின் மிக முக்கியமான பல இயக்குனர்களையும் அதிக தாக்கத்து…

மெல்வில் எனது கடவுள் - ஜான் வூ தமிழில்: ராம் முரளி

குப்ரிக்கின் திரைக்கலை! – ஸ்காட் பெக்ஸ் தமிழில்: ராம் முரளி

1999ல் ஸ்டான்லி குப்ரிக் மரணத்தை தழுவி விட்டபின்பும், இதுவரையிலும் இருபது படங்களிலாவது அவருடைய பெயர் டைட்டில் கார்டில் தொடர்ந்து விழுந்துக்கொண்டுதான் இருக்கின்றது. உலகின் எண்ணற்ற இயக்குனர்கள் தங்களின் திரைப்படங்களின் மூலமாக தொடர்ந்து அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டும், அவரைப்பற்றிய படங்களை இயக்கிக்கொண்டும் இருக்கிறார்கள். அவரது திரைபாணி ஏற்படுத்திய வீரியமிக்க தாக்கத்தால், பல இளைஞர்கள் அவரது புகழை உலகம் முழுவதும் இன்றும் பரப்பி வருகிறார்கள். அவருடைய இறுகலான குறும்புத்தனம் நம்மை ஆடம்பர உணவகங்களுக்கும், சண்டைகளற்ற போர் அறைகளுக்கும், வான் வெளிக்கும் அழைத்து சென்று பரவசமடையவும், பதைபதைத்து நடுங்கவும் செய்திருக்கின்றது.

சினிமா சார்ந்த உரையாடல்களில் தவிர்க்கவியலாத, என்றென்றும் நிலைத்திருக்கும் புகழை அடைந்திருக்கிறது அவருடைய பெயர். பாரம்பரியமிக்க வணிக சினிமாவிலிருந்து முற்றாக விலகி அதிகம் சர்ச்சைக்குரிய சவாலான களங்களை மிகுந்த மேதமையுடன் கையாண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியா புகழை அடைந்திருக்கிறார் ஸ்டான்லி குப்ரிக்.

எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள…