Skip to main content

ஆட்டிசம் நோய் அல்ல.... குறைபாடு தான்


           ஆட்டிசம் (AUTISM)  / மதியிறுக்கம் என்பது மூளை வளர்ச்சி சம்பந்தமான வேறுபாட்டை குறிக்கும். இந்த ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றவர்களுடன் தங்கள் எண்ணங்களை பறிமாறவோ , சமூகத்தில் இணைந்து இருக்கவோ , தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவோ இயலாதவர்களாக இருப்பார்கள். ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான சிகிச்சை முறை இரண்டாக பிரிக்கப்படுகிறது. ஒன்று மருந்துகள் மூலமாக அனுகுவது மற்றொன்று குழந்தைகளின் குண நலன்களின் அடிப்படையில் அணுகுவது. கோவையில் உள்ள வாமனா அட்வான்ஸ்டு தெரஃபி அன்ட் கைடன்ஸ் சென்டரின் (advanced theraphy and guidance centre) இயக்குனர் மனோஜ்குமார் ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளை மருந்துகளை விட அவர்களின் குண நலன்களை வைத்து அனுகுவதே நல்ல சிகிச்சை முறை என்கிறார்.

                    
                          
                        " ஆட்டிசம் என்பது ஒரு நிறப்பிரிகை (spectrum disorder)  வகையிலான குறைபாடு , அதாவது ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மாதிரியாகவோ , ஒரே அளவிலோ பாதிக்கப்படுவதில்லை. இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மொழியை புரிந்துக்கொள்வதில், சகஜமாக மற்றவர்களோடு உரையாடுவதில் மிகவும் சிரமப்படுவார்கள். சில குழந்தைகளுக்கு பேச்சு திறன் முழுமையாக  இருக்காது. சைகைகள் முகபாவங்கள் மற்றும் குரலின் தன்மையை புரிந்துக்கொள்வதில் தடுமாறுவார்கள். கேள்விகளை புரிந்துக்கொண்டு பதிலளிப்பதில் கஷ்டம். ஒருவர் சொல்வதை கேட்டு திரும்ப சொல்வதில் கஷ்டம் , இதை எக்கோலேலியா என்று சொல்லுவார்கள். இப்படி பல வகைகளில் இந்த ஆட்டிசம் குழந்தைகளை தாக்குகிறது. இந்த குறைபாடு உள்ள குழந்தைகள் ஏதோ ஒரு விதத்தில் தனி உலகத்தில் இருப்பதை போன்ற பாவனையில் இருப்பார்கள். பொதுவாக ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஒரு வயதிற்குள் கண்டறிவது கடினம். ஒரு குழந்தை மூன்று வயது வரை எப்படி வளருகிறது என்பதை கூர்ந்து கவனித்தால் தான் இந்த குறைபாட்டை கண்டுபிடிக்க முடியும்.
                            
              இந்த ஆட்டிசத்தின் முக்கிய காரணமாக பரம்பரை மரபணுக்களின் குறைபாடு , பாதரசம் கலந்த மருந்துகளை தெரியாமல் அருந்திவிடுவது , உடலில் தாது உப்புகள் மற்றும் உயிர் சத்துகளின் குரைபாடு , சுற்று சூழல் பாதிப்புகள் ஆகியன முக்கியமாக கருதப்படுகின்றன. இந்த குறைபாடு உள்ள குழந்தைகள்  உரையாடும் போது கண்ணோடு கண் பார்த்து பேச தடுமாறுவார்கள் , மழலைகள் செய்யும் சேட்டைகள் எதுவும் செய்யாமல் இருப்பார்கள் , பதினாறு மாதங்கள் ஆன பிறகும் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருத்தல் , இப்படி சில அறிகுறிகளை வைத்து ஆட்டிசத்தை உணரலாம்.
                  
                        ஆட்டிசம் சிலருக்கு தங்களின் வாழ் நாள் முழுவதும் இருக்கக்கூடிய ஒரு குறைபாடு ஆகும். அதன் காரணிகள் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கபடாமல் இருப்பதால் இதற்கென்று பிரத்யேக சிகிச்சை முறை எதுவும் கிடையாது. சில மருந்துகளின் மூலம் ஓரளவுக்கு கட்டுக்குள் மட்டுமே வைக்க முடியும். மன நல மருத்துவர்கள் , நரம்பியல் நிபுணர்கள் , மருத்துவர்கள் சில மருந்துகள் மூலம் நடத்தை பிரச்சனைகள் , தன்னை தானே காயப்படுத்திக் கொள்ளுதல் போன்றவற்றை கட்டுக்குள் வைக்கின்றனர்.
                 
          ஆனால் ஒரு குழந்தையின் அறிவுத்திறன் , குண நலன்கள் , செயல்பாடுகள் அந்த குழந்தை வளரும் சூழ் நிலை , குடும்பத்தின் பராமரிப்பு , நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அரவனைப்பு ஆகியவற்றை வைத்தே மாறுபடிகின்றது. இந்த ஆட்டிசம் குறைபாடை பற்றிய விழிப்புணர் சமூகத்தில் அதிகமாக தேவைபடுகிறது. மருந்துகளை காட்டிலும் இந்த குழந்தைகளை அரவணைத்து அவர்களை புரிந்து அவர்களுக்கு ஏற்றார் போல் பயிற்ச்சிகள் அளித்தால் இசை , ஓவியம் , அறிவியல் , விளையாட்டு போன்ற துறைகளில் சாதித்து பெரிய சாதனையாளர்களாக வருவார்கள். முதலில் அவர்களையும் சராசரி குழந்தைகளை போல பார்க்க வேண்டும். எங்கள் வாமனா க்ளினிக்கில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உரிய பரிசோதனை செய்து அவர்கள் குறைபாட்டின் தீவிரத்தை மதிப்பிட்டு அதற்கு ஏற்றார் போல சிகிச்சை அளித்து வருகிறோம். அவர்களுக்கு சகஜமாக பழகும் பயிற்ச்சிகள் , மற்றவர்களிடம் கலந்துரையாட பயிற்ச்சிகள் , அவர்களின் அறிவை மேம்படுத்தும் பயிற்ச்சிகள் அளித்து வருகிறோம் . இந்த ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மருந்துகளை விட அவர்களிடம் அவர்களுக்கி தகுந்தார்போல் இயல்பாகி பழகுவது இந்த குறைப்பாட்டுக்கான எளிமையான வழிமுறை “  என்கிறார் .  

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டு பெரிய அளவில் சாதித்தவர்கள்
1.ஸ்டீவன் ஸ்பீல்பர்க் ( ஹாலிவுட்டின் இயக்குனர் )
2.பில்கேட்ஸ் ( மைக்ரோசாஃப்ட் நிறுவனர் )

மருத்துவரை தொடர்பு கொள்ள: மனோஜ்குமார் 9843566510

Popular posts from this blog

காட்ஃபாதர் பேசுகிறார்...! பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பாலோ நேர்காணல் தமிழில்: ராம் முரளி

காட்ஃபாதர் திரைப்படத்தினை இதுவரையிலும் பத்துக்கும் மேற்பட்ட முறையாவது பார்த்திருப்பேன். ஒருபோதும் அப்படம் எனக்கு துளி சலிப்பையும் ஏற்படுத்தியதில்லை. வசீகரமான மாய கனவொன்றில் நுழைந்து சிறிது நேரம் உலாத்திவிட்டு மனமொப்பாது மீண்டும் இயல்புக்கு திரும்பும் உணர்வே ஒவ்வொருமுறை காட்ஃபாதரை பார்த்து முடிக்கும்போதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. “ஒரு திரைப்படம் முடிவடைகின்றபோது, அதன் மைய கதாப்பாத்திரத்திடமிருந்து விடைபெறுதல் என்பது மிகவும் துன்பகரமானது” என்ற புகழ்பெற்ற இயக்குனர் ஒருவரின் மேற்கோள் காட்ஃபாதர் திரைப்படத்துக்கு மிக கச்சிதமாக பொருந்தும். காட்ஃபாதராக திரையில் நடமாடிய மர்லன் பிராண்டோவின் சிறுசிறு அசைவுகளும் என்னை பெரிதும் வசீகரித்திருக்கிறது. மிகப்பெரிய மாஃபியா கும்பலொன்றின் தலைவனாக அறிமுகமாகி, தன் குடும்பத்தின் மீதான அன்பினால் இறுதியில் தனது கட்டுறுதி குலைந்து சிறுபிள்ளைப்போல அழுகின்ற பிராண்டோவின் முகம் இப்போதும் நினைவில் தங்கியுள்ளது. அல் பாசினோ – ராபர்ட் டி நிரோ என்ற மிகச்சிறந்த இரு நடிகர்களை அடையாளம் காட்டிய காட்ஃபாதர் திரைப்படம் உலகின் மிக முக்கியமான பல இயக்குனர்களையும் அதிக தாக்கத்து…

மெல்வில் எனது கடவுள் - ஜான் வூ தமிழில்: ராம் முரளி

குப்ரிக்கின் திரைக்கலை! – ஸ்காட் பெக்ஸ் தமிழில்: ராம் முரளி

1999ல் ஸ்டான்லி குப்ரிக் மரணத்தை தழுவி விட்டபின்பும், இதுவரையிலும் இருபது படங்களிலாவது அவருடைய பெயர் டைட்டில் கார்டில் தொடர்ந்து விழுந்துக்கொண்டுதான் இருக்கின்றது. உலகின் எண்ணற்ற இயக்குனர்கள் தங்களின் திரைப்படங்களின் மூலமாக தொடர்ந்து அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டும், அவரைப்பற்றிய படங்களை இயக்கிக்கொண்டும் இருக்கிறார்கள். அவரது திரைபாணி ஏற்படுத்திய வீரியமிக்க தாக்கத்தால், பல இளைஞர்கள் அவரது புகழை உலகம் முழுவதும் இன்றும் பரப்பி வருகிறார்கள். அவருடைய இறுகலான குறும்புத்தனம் நம்மை ஆடம்பர உணவகங்களுக்கும், சண்டைகளற்ற போர் அறைகளுக்கும், வான் வெளிக்கும் அழைத்து சென்று பரவசமடையவும், பதைபதைத்து நடுங்கவும் செய்திருக்கின்றது.

சினிமா சார்ந்த உரையாடல்களில் தவிர்க்கவியலாத, என்றென்றும் நிலைத்திருக்கும் புகழை அடைந்திருக்கிறது அவருடைய பெயர். பாரம்பரியமிக்க வணிக சினிமாவிலிருந்து முற்றாக விலகி அதிகம் சர்ச்சைக்குரிய சவாலான களங்களை மிகுந்த மேதமையுடன் கையாண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியா புகழை அடைந்திருக்கிறார் ஸ்டான்லி குப்ரிக்.

எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள…